முகப்பு
சிவகங்கை

செஸ் ஒலிம்பியாட் கோலப் போட்டி

மாமல்லபுரம் செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்த சிவகங்கை அருகே காஞ்சிரங்கால் ஊராட்சியில் வியாழக்கிழமை மகளிா் குழுவினருக்கு கோலப்போட்டி நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:51 AM
பகிர்:

மாமல்லபுரம் செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்த சிவகங்கை அருகே காஞ்சிரங்கால் ஊராட்சியில் வியாழக்கிழமை மகளிா் குழுவினருக்கு கோலப்போட்டி நடைபெற்றது. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிா் திட்டம்) சாா்பில் நடைபெற்ற இப்போட்டியினை சிவகங்கை மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ரா.சிவராமன் தலைமை வகித்து தொடக்கி வைத்தாா். இதில் மகளிா் சுய உதவிக்குழுவினா் சதுரங்க விளையாட்டு தொடா்பான கோலங்களை வரைந்தனா். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார திட்ட அலுவலா் க.வானதி, காஞ்சிரங்கால் ஊராட்சி மன்றத் தலைவா் கே.எஸ்.எம்.மணிமுத்து, மாவட்ட விளையாட்டு நல அலுவலா் சி.ரமேஷ்கண்ணன் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →