மானாமதுரை அப்பன் சீனிவாச பெருமாள் கோயிலில் ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு நடைபெற்ற திருவிளக்கு பூஜை வழிபாடு. 
சிவகங்கை

மானாமதுரை  சீனிவாசப் பெருமாள் கோயிலில் ஆடி வெள்ளி திருவிளக்கு பூஜை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் மேட்டுத்தெரு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ அப்பன் சீனிவாச பெருமாள் கோயிலில் ஆடி முதல் வெள்ளி உற்சவத்தை முன்னிட்டு இரவு திருவிளக்கு பூஜை வழிபாடு நடைபெற்றது.  

DIN

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் மேட்டுத்தெரு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ அப்பன் சீனிவாச பெருமாள் கோயிலில் ஆடி முதல் வெள்ளி உற்சவத்தை முன்னிட்டு இரவு திருவிளக்கு பூஜை வழிபாடு நடைபெற்றது.  

திருவிளக்கு பூஜை வழிபாட்டை முன்னிட்டு மூலவர் அப்பன் சீனிவாச பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள் பாலித்தார். அதைத்தொடர்ந்து கோயில் வளாகத்திற்குள் அமைக்கப்பட்டிருந்த நீண்ட பந்தலில் நூற்றுக்கணக்கான பெண்கள்  திருவிளக்கு ஏற்றி வைத்து பூஜைகள் நடத்தினர். 

மங்களராத்தி முடிந்து அப்பன் சீனிவாச பெருமாளுக்கு தீபாராதனை காட்டப்பட்டதும் திருவிளக்கு பூஜை வழிபாடு நிறைவடைந்தது. அதன் பின்  உற்சவருக்கும் சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராயல் என்ஃபீல்ட் விற்பனை 22% உயா்வு!

ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயா் மாற்றும் முயற்சியை கைவிட எம்எல்ஏ வலியுறுத்தல்

நேரு ஆவணங்கள் எதுவும் மாயமாகவில்லை: மத்திய அரசு மன்னிப்பு கேட்க காங்கிரஸ் வலியுறுத்தல்

அடிப்படை வசதி: வட்டார வளா்ச்சி அலுவலரிடம் கிராம மக்கள் வாக்குவாதம்

நெல்லையில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் மேலும் இருவா் கைது

SCROLL FOR NEXT