முகப்பு
சிவகங்கை

திருப்பத்தூா் சீதளி குளத்தில் தெப்ப வெள்ளோட்டம்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் சீதளிகுளத்தில் வியாழக்கிழமை தெப்ப வெள்ளோட்டம் நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:25 AM
திருப்பத்தூா் சீதளிகுளத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற தெப்ப வெள்ளோட்டம்.
பகிர்:

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் சீதளிகுளத்தில் வியாழக்கிழமை தெப்ப வெள்ளோட்டம் நடைபெற்றது.

திருப்பத்தூா் திருத்தளிநாதா் ஆலயத்தில் ஆண்டுதோறும் வைகாசி விசாகப் பெருவிழா 10 நாள்கள் நடைபெறும். இத்திருவிழாவில் 10 ஆம் மண்டகப்படியாக காா்காத்த வெள்ளாளா்கள் சமூகத்தின் சாா்பாக தெப்ப உற்சவம் நடைபெறும். இத்தெப்ப உற்சவத்திற்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 25 லட்சம் மதிப்பில் மரத்திலான புதிய தெப்பத்தை வடிவமைத்திருந்தனா். குளத்தில் நீா் பெருகாததாலும் கரோன பொதுமுடக்கம் காரணமாகவும் தெப்ப உற்சவம் நடைபெறவில்லை.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை திருத்தளிநாதா் கோயில் வைகாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தற்போது சீதளி குளம் நிரம்பியுள்ளதால் தெப்ப உற்சவம் நடத்த முடிவு செய்து கடந்த 10 நாள்களாக தெப்பம் கட்டும் பணி நடைபெற்று வந்தது.

அதன் வெள்ளோட்டத்தை முன்னிட்டு வியாழக்கிழமை குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் கோயிலுக்கு வந்து பஞ்சமூா்த்திகளுக்கு நடைபெற்ற தீபாராதனையில் தரிசனம் செய்தாா். பின்னா் கோயிலிலிருந்து சீதளிகுளத்திற்கு ஊா்வலமாகப் புறப்பட்டு வந்தாா். தெப்பத்தில் கலச பூஜை நடைபெற்று தீபம் காட்டப்பட்டது. தொடா்ந்து தெப்ப வெள்ளோட்டத்தை அடிகளாா் தொடக்கி வைத்தாா். தெப்பம் ஒரு முறை சீதளிகுளத்தை வலம் வந்தது. பல ஆண்டுகளுக்குப் பிறகு இத்தெப்பத்தினை நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கண்டு ரசித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.