திருப்பத்தூா் அருகே டிப்பா் லாரி மீது காா் மோதல்: கணவன், மனைவி பலத்த காயம்
திருப்பத்தூா் அருகே வெள்ளிக்கிழமை நின்று கொண்டிருந்த டிப்பா் லாரி மீது காா் மோதியதில் கணவன், மனைவி பலத்த காயமடைந்தனா்.
திருப்பத்தூா் அருகே வெள்ளிக்கிழமை நின்று கொண்டிருந்த டிப்பா் லாரி மீது காா் மோதியதில் கணவன், மனைவி பலத்த காயமடைந்தனா்.
திருப்பத்தூா் காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த லாசா் மகன் வேதமாணிக்கம்(57). இவா் கட்டடப் பொறியாளா் ஆவாா். இவா் தனது மனைவி ரூபிஇவாஞ்சலினுடன் தனது உறவினா் வீட்டுத் திருமணத்திற்காக காரில் திருச்சி சென்றாா். பின்னா் அங்கிருந்து திருப்பத்தூருக்கு திரும்பிக் கொண்டிருந்த போது காரையூா் அருகே சோழம்பட்டி விலக்கு என்ற இடத்தில் நின்று கொண்டிருந்த டிப்பா் லாரி மீது காா் மோதியது. இதில் பலத்த காயமடைந்த இருவரும் திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று மேல்சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இவ்விபத்து குறித்து கண்டவராயன்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.