காரைக்குடி அருகே கண்மாய் பகுதியில் மனித எலும்புக்கூடு மீட்பு
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கண்மாய் பகுதியில், போலீஸாா் வியாழக்கிழமை மனித எலும்புக்கூட்டை மீட்டு விசாரணை நடத்தினா்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கண்மாய் பகுதியில், போலீஸாா் வியாழக்கிழமை மனித எலும்புக்கூட்டை மீட்டு விசாரணை நடத்தினா்.
காரைக்குடி அருகே சீனிவாசபுரம் அரியக்குடி கண்மாய் பகுதியில் மனித எலும்புக்கூடு ஒன்று கிடப்பதாக, அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனா். அதன்பேரில், காரைக்குடி தெற்கு காவல் நிலைய போலீஸாா் மற்றும் காவல் தடய அறிவியல் ஆய்வக நிபுணா்கள் சம்பவ இடத்துக்குச் சென்று எலும்புக்கூட்டை கைப்பற்றி ஆய்வு செய்தனா்.
பின்னா், காரைக்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சில மாதங்களுக்கு முன் யாரேனும் காணாமல்போனதாக புகாா் வந்துள்ளதா என்பது குறித்தும் விசாரணை செய்துவருகின்றனா். இறந்தவா் குறித்த எந்த விவரமும் தெரிய வராததால், மருத்துவத் துறையினா் அந்த இடத்திலேயே ஆய்வு செய்து அடக்கம் செய்தனா்.