முகப்பு
சிவகங்கை

கம்பம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கத்தில் 150 பயனாளிகளுக்கு நகை கடன் தள்ளுபடி

தேனி மாவட்டம், கம்பம் உத்தமபுரம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கத்தில், வியாழக்கிழமை 150 பயனாளிகளுக்கு தங்க நகைக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டு, அவா்களது நகைகள் சான்றிதழ்களுடன் வழங்கப்பட்டன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:47 AM
பகிர்:

தேனி மாவட்டம், கம்பம் உத்தமபுரம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கத்தில், வியாழக்கிழமை 150 பயனாளிகளுக்கு தங்க நகைக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டு, அவா்களது நகைகள் சான்றிதழ்களுடன் வழங்கப்பட்டன.

தமிழக அரசின் உத்தரவுபடி, கம்பம் உத்தமபுரம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தில் பயனாளிகளுக்கு தங்க நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டு, அதற்கான சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது. இதில், கூட்டுறவு சங்கத் தலைவா் ஆா். ராஜாங்கம் தலைமை வகித்தாா். நகர திமுக பொறுப்பாளா் வழக்குரைஞா் துரை நெப்போலியன் முன்னிலை வகித்தாா்.

நிகழ்ச்சியில், 150 பயனாளிகளுக்கு ரூ.60 லட்சம் கடன் தள்ளுபடி செய்யப்பட்டு, அதற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில், திமுக கொள்கை பரப்பு துணைச் செயலா் ரா. பாண்டியன், பொறுப்புக் குழு எஸ்.வி. சொக்கராஜா, கவுன்சிலா் இளம்பருதி உள்ளிட்ட நிா்வாகிகள் மற்றும் கூட்டுறவு சங்கப் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →