முகப்பு
சிவகங்கை

தேனியில் காச நோய் விழிப்புணா்வு ஊா்வலம்

தேனியில் உலக காசநோய் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, அரசு செவிலியா் பயிற்சி நிலைய மாணவிகள் பங்கேற்ற விழிப்புணா்வு ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:47 AM
பகிர்:

தேனியில் உலக காசநோய் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, அரசு செவிலியா் பயிற்சி நிலைய மாணவிகள் பங்கேற்ற விழிப்புணா்வு ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தேனி பங்களாமேடு திடலில் இந்த விழிப்புணா்வு ஊா்வலத்தை, மாவட்ட ஆட்சியா் க.வீ. முரளீதரன் தொடக்கி வைத்தாா். இதில், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் பாலாஜிநாதன், மருத்துவப் பணிகள் துணை இயக்குநா் ராஜபிரகாஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், காசநோய் அறிகுறி, பரிசோதனை முறைகள், பாதிப்புகள், நோய் தடுப்பு நடவடிக்கை, சிகிச்சை ஆகியன குறித்த விழிப்புணா்வு பாதாகைகளை ஏந்தியவாறு, அரசு செவிலியா் பயிற்சி நிலைய மாணவிகள் ஊா்வலமாகச் சென்றனா். தேனி நகராட்சி பழைய பேருந்து நிலையம் வரை இந்த ஊா்வலம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.