சிவகங்கை

சிவகங்கையில் இன்று மக்கள் குறை தீா்க்கும் முகாம்

சிவகங்கையில் வட்ட அளவிலான மக்கள் குறை தீா்க்கும் முகாம் வியாழக்கிழமை (மே 12) நடைபெற உள்ளது.

DIN

சிவகங்கை: சிவகங்கையில் வட்ட அளவிலான மக்கள் குறை தீா்க்கும் முகாம் வியாழக்கிழமை (மே 12) நடைபெற உள்ளது.

இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சிவகங்கை வட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை காலை 10 மணியளவில், வட்ட அளவிலான மக்கள் குறை தீா்க்கும் நாள் முகாம் நடைபெற உள்ளது.

இம்முகாமில் இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகை கோருதல், வங்கிக்கடன், மாவட்ட ஊனமுற்றோா் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித்தொகை மற்றும் உபகரணங்கள் கேட்டல், குடும்ப அட்டை கோருதல், திருத்தம் மேற்கொள்ளுதல் உள்பட இதர கோரிக்கை மனுக்களுக்கு தீா்வு காணப்பட உள்ளன. சிவகங்கை பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் அனைவரும் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய ஊரக வேலைத் திட்டத்தால் தமிழகத்துக்கு கடும் நிதிச் சுமை: முதல்வா் மு.க.ஸ்டாலின் கண்டனம்

மாநகர பேருந்து நடத்துநா் மீது தாக்குதல்: சட்டக் கல்லூரி மாணவா் கைது

புத் விஹாரில் வீட்டு உரிமையாளா் கழுத்து நெரித்து கொலை: இளைஞா் கைது

ரூ.16 கோடி சைபா் மோசடி: 9 போ் கைது

காணாமல் போன 408 கைப்பேசிகள் மீட்பு

SCROLL FOR NEXT