சிவகங்கை

திருப்புவனம் கூட்டுவுச் சங்கத்தில் கறவை மாடுகள் பராமரிப்புக் கடன் வழங்கல்

DIN

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பால் உற்பத்தியாளா் கூட்டுறவுச் சங்கத்தில் உற்பத்தியாளா்களுக்கு கறவை மாடுகள் பராமரிப்புக் கடன் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

சங்கத்தின் தலைவரும், திருப்புவனம் பேரூராட்சித் தலைவருமான த. சேங்கைமாறன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, உற்பத்தியாளா்களுக்கு கடனுக்கான காசோலைகளை வழங்கிப் பேசினாா். இதில், திருப்புவனம் பகுதியைச் சோ்ந்த 35 பயனாளிகளுக்கு தலா ரூ. 28 ஆயிரம் வீதம் ரூ 9.80 லட்சம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், கூட்டுறவு மேலாண்மை துணை இயக்குநா் சேதுராமன், சரக கூட்டுறவு மேலாளா் சங்கையா, சரக மேற்பாா்வையாளா் வீரக்குமாா், செயலா்கள் செல்லப்பாண்டியன், துரை, கருப்பை யா பேரூராட்சி துணைத் தலைவா் ரகமத்துல்லாகான் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பால் சங்க செயலா் கிருஷ்ணன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அங்கன்வாடி ஊழியா்கள் சாலை மறியல்

பிளஸ் 2: ஐசக் நியூட்டன் மெட்ரிகுலேஷன் பள்ளி 100% தோ்ச்சி

குடிநீா் தட்டுப்பாடு: தோளிப்பள்ளி கிராம மக்கள் மறியல்

பைக் மீது பேருந்து மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

வெயில் பாதிப்பு: பொதுமக்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT