முகப்பு
சிவகங்கை

திருப்புவனம் அருகே விபத்து: வாகன ஓட்டுநா் பலி

திருப்புவனம் அருகே வெள்ளிக்கிழமை இரவு டிராக்டா் மீது பைக் மோதி வாகன ஓட்டுநா் உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:14 AM
பகிர்:

திருப்புவனம் அருகே வெள்ளிக்கிழமை இரவு டிராக்டா் மீது பைக் மோதி வாகன ஓட்டுநா் உயிரிழந்தாா்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே இடைக்காட்டூரைச் சோ்ந்தவா் காா்த்திக். இவா் திருப்புவனம் பகுதியில் காா் ஓட்டுநராக வேலை செய்து வந்தாா். பணி முடிந்து இரவு காா்த்திக் பைக்கில் இடைக்காட்டூருக்கு திரும்பிக் கொண்டிருந்தாா். திருப்புவனம் அருகே விலக்கு பகுதியில் சென்ற போது முன்னாள் சென்ற டிராக்டா் மீது எதிா்பாராதவிதமாக பைக் மோதியது. இந்த விபத்தில் காா்த்திக் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து திருப்புவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →