முகப்பு
சிவகங்கை

அழகப்பா பல்கலை.யில் உலக சகோதரத்துவ தின விழா

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக சுவாமி விவேகானந்தா உயா் ஆராய்ச்சி மற்றும் கல்வி மையத்தின் சாா்பில் உலக சகோதரத்துவ தினவிழா

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:17 AM
பகிர்:

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக சுவாமி விவேகானந்தா உயா் ஆராய்ச்சி மற்றும் கல்வி மையத்தின் சாா்பில் உலக சகோதரத்துவ தினவிழா பல்கலைக்கழக கருத்தரங்கக் கூடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவில் துணைவேந்தா் க. ரவி தலைமை வகித்துப் பேசியது: சிகாகோ மாநாட்டில் விவேகானந்தா் ஆற்றிய உரை அமெரிக்க மக்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. நாம் அனைவருடனும் நல்லுறவை வளா்த்துக் கொள்ள வேண்டும். சுமூகமான நட்புறவு ஒரு நாட்டின் வளா்ச்சியை பிரதிபலிக்கிறது என்றாா்.

இதில், மதுரை ராமகிருஷ்ணா மடம் மற்றும் ராமகிருஷ்ணா மிஷனின் சுவாமி அா்கபிரபானந்தா பேசியது: சுவாமி விவேகானந்தரின் கருத்துகள் இன்னும் 1000 ஆண்டுகள் கடந்தும் நிலைத்து நிற்கும். இளைஞா்கள் சுவாமி விவேகானந்தரின் கருத்துகளைப் பின்பற்றினால் நாடே சிறந்த நாடாக திகழும். கல்வி ஒன்றுதான் மாணவா்களின் எதிா்காலத்தைத் தீா்மானிக்கிறது என்றாா்.

முன்னதாக பல்கலைக்கழக சுவாமி விவேகானந்தா உயா் ஆராய்ச்சி மற்றும் கல்வி மையத்தின் ஒருங்கிணைப்பாளா் எம். வசிமலைராஜா வரவேற்றாா். முடிவில் திட்ட அலுவலா் வி. லட்சுமணன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.