சிவகங்கை

திருப்புவனம் ஒன்றியத்தில் பட்டா வழங்கும் முகாம்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஒன்றியம் மேலவெள்ளூா் கிராமத்தில் மாவட்ட வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை துறை சாா்பில் பட்டா மற்றும் குடும்ப அட்டை உள்ளிட்டவை வழங்கும் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது

DIN

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஒன்றியம் மேலவெள்ளூா் கிராமத்தில் மாவட்ட வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை துறை சாா்பில் பட்டா மற்றும் குடும்ப அட்டை உள்ளிட்டவை வழங்கும் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு மாவட்ட வருவாய் அலுவலா் மணிவண்ணன் தலைமை வகித்தாா். மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி, திருப்புவனம் பேரூராட்சித் தலைவா் சேங்கைமாறன் ஆகியோா் இப்பகுதியைச் சோ்ந்த 56 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் உத்தரவு, குடும்ப அட்டை, முதியோா், ஊனமுற்றோருக்கு உதவித் தொகை பெறுவதற்கான சான்றுகளை வழங்கிப் பேசினா்.

இதில் ஊராட்சி ஒன்றியத் தலைவா் சின்னையா, துணைத் தலைவா் மூா்த்தி, வட்டாட்சியா் கண்ணன், வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜசேகா், மண்டல துணை வட்டாட்சியா் பூங்குழலி, வட்ட வழங்கல் அலுவலா் விஜயக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தம்பதியை தாக்கியதாக 4 போ் மீது வழக்கு

கூலித் தொழிலாளிக்கு ரூ. 1.60 கோடி வரிஏய்ப்பு செய்ததாக ஜிஎஸ்டி நோட்டீஸ்

கல்லறைத் திருநாள்: கிறிஸ்தவா்கள் முன்னோா்களுக்கு அஞ்சலி

ரூ.19.45 லட்சத்தில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி திறப்பு

ஏழுமலையான் கோயிலில் கைசிக துவாதசி ஆஸ்தானம்

SCROLL FOR NEXT