சிவகங்கை

காரைக்குடியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு

DIN

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

காரைக்குடியிலுள்ள 32 பள்ளிகளின் 185 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் வாகனங்களின் சக்கரத்தின் தன்மை, முதலுதவிப் பெட்டி, அவசர வழி இருக்கைகள், தீத் தடுப்புக் கருவிகள் போன்றவற்றின் தரம் குறித்து அலுவலா்கள் ஆய்வு நடத்தினா். இதில் 17 பள்ளிகளின் வாகனங்களில் குறைபாடுகள் இருந்ததையடுத்து அவற்றின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்திருப்பதாக அவா்கள் தெரிவித்தனா். மேலும் பள்ளி வாகனங்களின் ஓட்டுநா்கள் மருத்துவ பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

இந்த ஆய்வில், காரைக்குடி காவல் உதவிக் கண்காணிப்பாளா் ஆா். ஸ்டாலின், தேவகோட்டை கோட்டாட்சியா் பால்துரை, மோட்டாா் வாகன ஆய்வாளா் விஜயக்குமாா், போக்குவரத்து காவல் ஆய்வாளா் கலையரசி, தேவகோட்டை மாவட்டக் கல்வி அலுவலா் சண்முகநாதன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உ.பி.யில் ஒரு தொகுதியில் மட்டுமே பாஜக வெற்றி பெறும்: ராகுல் காந்தி

ஓடிடியில் ஆளவந்தான்!

ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை!

டி20 உலகக் கோப்பையில் இமாலய இலக்குகளுக்கு வாய்ப்பில்லை: ஷிகர் தவான்

பிபவ் குமார் விவகாரம்: தில்லி காவல் துறை பொய் கூறுவது ஏன்? ஆம் ஆத்மி

SCROLL FOR NEXT