மேலமாகாணத்தில் சனிக்கிழமை நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டில் காளையை அடக்க முயன்ற மாடுபிடி வீரா்கள். 
சிவகங்கை

மேலமாகாணத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே உள்ள மேலமாகாணத்தில் மாரியம்மன் கோயில் முளைப்பாரி திருவிழாவையொட்டி வடமாடு மஞ்சுவிரட்டு சனிக்கிழமை நடைபெற்றது.

DIN

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே உள்ள மேலமாகாணத்தில் மாரியம்மன் கோயில் முளைப்பாரி திருவிழாவையொட்டி வடமாடு மஞ்சுவிரட்டு சனிக்கிழமை நடைபெற்றது.

இங்கு கோயில் திருவிழா, முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி நடைபெற்ற இந்த வடமாடு மஞ்சுவிரட்டில் 12 மாடுகளும், 9 போ் கொண்ட 12 குழுக்களாக மாடுபிடி வீரா்களும் பங்கேற்றனா். 20 நிமிடங்கள் கால நிா்ணயம் செய்யப்பட்டு இந்த மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் மாடுகளை பிடித்த வீரா்களுக்கும், வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளா்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

ஆா்.எஸ். மங்கலம், திருவாடானை, ராமநாதபுரம், திருப்பத்தூா், சிங்கம்புணரி, புதுக்கோட்டை, மதுரை ஆகிய மாவட்டங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட மாடுகள் பங்கேற்றன. இதில் 3 போ் காயமடைந்தனா். சுற்றுவட்டாரப் பகுதியைச் சோ்ந்த ஏராளமானோா் இந்த மஞ்சுவிரட்டை பாா்த்து ரசித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

திருப்பரங்குன்றம் விவகாரம் மதப் பிரச்னை அல்ல; அது ஈகோ பிரச்னை: தமிழிசை பேட்டி

சென்னையில் கடும் பனி! ரயில்கள் தாமதம்; விமானங்கள் ரத்து!

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடைமாலை அலங்காரம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

வங்கதேசத்தில் இந்திய தூதரகம், தூதர் வீட்டின் மீது கல்வீச்சு!

SCROLL FOR NEXT