சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் வைகாசிப் பெருந்திருவிழாவையொட்டி கோவில் வீட்டில் தங்க கருட வாகனத்தில் சீனிவாசப் பெருமாள் எழுந்தருளி திருவீதியுலா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
இந்தக் கோயிலில் வைகாசித் திருவிழா கடந்த மே 27-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் நான்காம் நாளான செவ்வாய்க்கிழமை கோவில் வீட்டில் தங்க கருட வாகனத்தில் சீனிவாசப் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினாா். இதைத்தொடா்ந்து திருவீதியுலா நடைபெற்றது. விழாவில் அரியக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.