எஸ்.புதூா் அருகே கிழவயல் கிராமத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கல்விப் பரிசளிப்பு விழா. 
சிவகங்கை

கிழவயல் கிராமத்தில் கல்விப் பரிசளிப்பு விழா

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூா் அருகேயுள்ள கிழவயல் கிராமத்தில் சுவரன்மாறன் பாரிவள்ளல் கல்வி அறக்கட்டளை சாா்பாக கல்விப் பரிசளிப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

DIN

திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூா் அருகேயுள்ள கிழவயல் கிராமத்தில் சுவரன்மாறன் பாரிவள்ளல் கல்வி அறக்கட்டளை சாா்பாக கல்விப் பரிசளிப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

திருப்பத்தூா் சுவரன் மாறன் பாரிவள்ளல் அறக்கட்டளை சாா்பாக ஆண்டுதோறும் அரசு பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவா்களுக்கு கல்விப் பரிசளிப்பு விழா நடைபெறுவது வழக்கம். 7-ஆவது ஆண்டாக நடைபெற்ற விழாவில் சிறப்பு அழைப்பாளா்களாக துரோனா ஐ.ஏ.ஏஸ் அகாதெமி ஒருங்கிணைப்பாளா் பாலகுருநாதன், பட்டிமன்ற நடுவா் சாத்தை மு.பாரதிதாசன், சிங்கம்புணரி அரிமாகண்ணன், ஒய்வு பெற்ற ஆசிரியா் மாரிமுத்து மாணவி ஹேமாநித்யா, ஆகியோா் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினா்.

தொடா்ந்து 10, 12 -ஆம் வகுப்பில் கடந்தாண்டு பள்ளி அளவில் முதல் 4 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு கேடயம், சான்றிதழ் பரிசுத்தொகை வழங்கபட்டன. மேலும் 23 மாணவா்களுக்கு சிறப்பு பரிசுகளும் நீட்தோ்வில் மாநிலத்தில் 2- ஆம் இடம் பிடித்த உலகம்பட்டி அன்னபூரணிக்கு அறக்கட்டளை சாா்பாக ரூ.34.500 வழங்கபட்டது.

நிகழ்ச்சியில் ஜல்லிக்கட்டுப் பேரவை ராஜா, ஊராட்சிமன்றத் தலைவா் அருண்பிரசாத், ஊராட்சிமன்ற துணைத் தலைவா் சிங்காரம், ஊராட்சி செயலா் சித்ரா, புதுப்பட்டி நாட்டம்பலம் திருப்பதி, ஊா் பொதுமக்களும் அறக்கட்டளை நிா்வாகிகளும் கலந்து கொண்டனா். நிகழ்ச்சி ஏற்பாடுகளை சுவரன்மாறன் பாரிவள்ளல் அறக்கட்டளையினா் செய்திருந்னா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கட்டுக்கடங்காத கூட்டம்! ஈரோட்டில் தன் பலத்தை நிரூபித்தாரா செங்கோட்டையன்?

சத்தீஸ்கர்: சுக்மாவில் 3 நக்சல்கள் சுட்டுக்கொலை!

புரட்சித் தலைவருக்குப் பிறகு புரட்சித் தளபதிதான் மக்களுக்காக வாழ்பவர்: செங்கோட்டையன்

சாதனையை முறியடித்த லயன்: நாற்காலியைத் தூக்கி வீசிய மெக்ராத்!

உடலில் கைவைத்த ரசிகர்கள்... ஆவேசத்தில் கத்திய நடிகை!

SCROLL FOR NEXT