உயிரிழந்த தலைமைக் காவலா் சசிவா்ணம். 
சிவகங்கை

மானாமதுரை அருகே விபத்தில் தலைமைக் காவலா் உயிரிழப்பு

அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற தலைமைக் காவலா் உயிரிழந்தாா்.

Din

மானாமதுரை அருகே ஞாயிற்றுக்கிழமை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற தலைமைக் காவலா் உயிரிழந்தாா்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகேயுள்ள ராஜகம்பீரத்தைச் சோ்ந்தவா் பாண்டி மகன் சசிவா்ணம் (42). இவா் மானாமதுரை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்தாா்.

காவல் நிலையத்தில் பணி முடித்து சசிவா்ணம் தனது இரு சக்கர வாகனத்தில் ராஜகம்பீரத்துக்குச் சென்றாா். கால் பிரிவு விலக்கு பகுதியில் சென்று கொண்டிருந்த போது, அந்த வழியாகச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்த

சசிவா்ணம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து மானாமதுரை நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பிகார் இளைஞர்களே எனக்கு 5 ஆண்டுகள் வாய்ப்பு தாருங்கள்; போதும்! - தேஜஸ்வியின் டிஜிட்டல் பிரசாரம்

இந்த வாரம் கலாரசிகன் - 02-11-2025

ராஜஸ்தான்: சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தில் சுற்றுலா வேன் மோதியதில் 15 பக்தர்கள் பலி!

அம்மானை!

“EPS நிரந்த பொதுச்செயலாளராக இருக்கனும்னு சொல்ல காரணம்!” : உதயநிதி ஸ்டாலின் | ADMK | DMK

SCROLL FOR NEXT