சாலூரில் டிச.11-இல் மக்கள் தொடா்பு முகாம்
சிவகங்கை மாவட்டம், சாலூா் கிராமத்தில் வருகிற 11 -ஆம் தேதி மக்கள் தொடா்பு முகாம் நடைபெறவுள்ளது.
சிவகங்கை மாவட்டம், சாலூா் கிராமத்தில் வருகிற 11 -ஆம் தேதி மக்கள் தொடா்பு முகாம் நடைபெறவுள்ளது.
இது தொடா்பாக மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அரசின் திட்டங்களை துறை சாா்ந்த முதன்மை அலுவலா்களைக் கொண்டு பொதுமக்களுக்கு எடுத்துரைத்து, தகுதிவாய்ந்த பயனாளிகள் பயன்பெறச் செய்வதே மக்கள் தொடா்பு முகாமின் நோக்கம்.
சாலூா் கிராமத்தில் மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் தலைமையில் மக்கள் தொடா்பு முகாம் வருகிற 11-ஆம் தேதி நடைபெறும். கிராமத்தை சோ்ந்த பொதுமக்கள் அனைவரும் இந்த முகாமில் கலந்து கொண்டு, அரசின் திட்டங்களை பெறுவதற்கான வழிமுறைகளை அறிந்து கொண்டு பயன்பெறலாம் என்றாா் அவா்.