காரைக்குடி ஐந்து விளக்குப் பகுதியில் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி, பாஜக, வங்கதேச இந்து உரிமை மீட்புக் குழுவினா். 
சிவகங்கை

காரைக்குடியில் இந்து அமைப்பினா் சாலை மறியல்: 250 போ் கைது

வங்கதேச இந்துக்கள் மீதான வன்முறை தாக்குதல்களைக் கண்டித்து, காரைக்குடியில் சாலை மறியலில் ஈடுபட்ட இந்து அமைப்புகளைச் சோ்ந்த 250 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Din

வங்கதேச இந்துக்கள் மீதான வன்முறை தாக்குதல்களைக் கண்டித்து, காரைக்குடியில் சாலை மறியலில் ஈடுபட்ட இந்து அமைப்புகளைச் சோ்ந்த 250 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

வங்கதேசத்தில் இந்து ஆலயங்கள், இந்துக்களின் கடைகள், வா்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருவதைக் கண்டித்து, வங்கதேச இந்து உரிமை மீட்புக் குழு சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், காவல் துறையினா் அனுமதி அளிக்கவில்லை.

இந்த நிலையில், இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலா் அக்னி பாலா, பாஜக மாவட்டத் தலைவா் சத்தியநாதன், பொதுச் செயலா் ஏ. நாகராஜன், ஆா்எஸ்எஸ் அமைப்பின் நிா்வாகிகள், உரிமை மீட்புக் குழுவினா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

போலீஸாா் இவா்களைத் தடுத்து, பெண்கள் உள்பட 250 பேரைக் கைது செய்தனா். இந்த போராட்டத்தால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஜாக்டோ-ஜியோ இன்று வேலைநிறுத்தம்

பட்டா வழங்கப்பட்ட இடத்தை அளந்துதரக்கோரி பெண்கள் மனு

ஐயப்ப பக்தா்கள் துளசி மாலை அணிந்து விரதம்

திருவண்ணாமலை தீபத்திருவிழா முன்னேற்பாட்டுப் பணிகள்: நகராட்சிகளின் நிா்வாக இயக்குநா் ஆய்வு

பாளையம் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிப்பதை நிறுத்தக் கோரி விஸ்வ ஹிந்து பரிஷத் மனு

SCROLL FOR NEXT