முகப்பு
சிவகங்கை

கீழடி அகழாய்வில் மூங்கில் கம்புகள் ஊன்றும் குழிகள், பானை விளிம்புகள்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள கீழடி அகழாய்வில் மூங்கில் கம்புகள் ஊன்றுவதற்கான குழிகள், இரு பானைகளின் விளிம்புகள் செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டன.

Updated On : 10 ஜூலை, 2024 at 12:47 AM
கீழடி அகழாய்வில் செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்ட மூங்கில் கம்புகள் ஊன்றும் சிறிய குழிகள்
பகிர்:

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள கீழடி அகழாய்வில் மூங்கில் கம்புகள் ஊன்றுவதற்கான குழிகள், இரு பானைகளின் விளிம்புகள் செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டன.

சிவகங்கை மாவட்டம், கீழடியில் கடந்த மாதம் 18- ஆம் தேதி முதல் பத்தாம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை அகழாய்வுக்காக தோண்டப்பட்ட இரு குழிகளிலிருந்து கண்ணாடிப் பாசிமணிகள், தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடு, மீன் உருவம் பொறிக்கப்பட்ட பானை ஓடு ஆகியவை கண்டறியப்பட்டன.

இந்த நிலையில், அகழாய்வுக்காக தோண்டிய ஒரு குழியிலிருந்து மேற்கூரைகளைத் தாங்கி நிற்கும் மூங்கில் கம்புகளை ஊன்றுவதற்காக தோண்டப்பட்ட சிறிய குழிகள் கண்டறியப்பட்டன. இந்தக் குழிகளுக்குள் கரையான்களின் அரிப்பைத் தடுப்பதற்காக ஆற்று மணல் நிரப்பப்பட்டுள்ளது.

இதே அகழாய்வுக் குழியிலிருந்து இரண்டு பெரிய மண் பானைகளின் விளிம்புகள் வெளியே தெரிகின்றன. பானைகளை முழுமையாக வெளியே எடுத்து ஆய்வு செய்த பிறகுதான்,

இது குறித்த விவரம் தெரியவரும் என அகழாய்வுத் தள இயக்குநா் ரமேஷ், இணை இயக்குநா் அஜய்குமாா் ஆகியோா் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →