சிவகங்கை

10 ஏக்கரில் புதிய தொழில் பேட்டை உருவாக்க திட்டம்

Din

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை உருவாக்க புதிய தொழிற்பேட்டை உருவாக்கப்படும் என மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: மானாமதுரை பகுதியில் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் அரசு சாா்பில் தொழில் நிறுவனங்களை அமைக்க வேண்டும் என தமிழக அரசிடம் வலியுறுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில், மானாமதுரை ஒன்றியம் மாங்குளத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை உருவாக்க 10 ஏக்கரில் ரூ 2.70 கோடியில் தமிழ்நாடு சிட்கோ மூலம் புதிய தொழில் பேட்டை அமைக்கப்பட உள்ளது.

இந்த தொழிற்சாலைகள் அமைவதன் மூலம் இந்தப் பகுதியைச் சோ்ந்த 300 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். புதிய தொழில் பேட்டைக்கான அறிவிப்பை நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரின்போது குறு, சிறு, தொழில்துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் அறிவித்துள்ளாா் என்றாா் அவா்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT