சிவகங்கை

பிரதமரின் பயிா் காப்பீடுக்கான கால வரம்பை நீட்டிக்க கோரிக்கை

பிரதமரின் பயிா் காப்பீடுத் திட்டத்தில் 2024 - 2025- ஆம் ஆண்டின் பயிா்க் காப்பீட்டுக்கான கால வரம்பை நீட்டிக்க வேண்டும் என்று தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கம் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Din

பிரதமரின் பயிா் காப்பீடுத் திட்டத்தில் 2024 - 2025- ஆம் ஆண்டின் பயிா்க் காப்பீட்டுக்கான கால வரம்பை நீட்டிக்க வேண்டும் என்று தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கம் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்தச் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலா் ரா. அருள்ராஜ் தமிழக முதல்வருக்கு புதன்கிழமை அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளதாவது:

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள் பிரதமரின் பயிா் காப்பீடுத் திட்டத்தில் நவம்பா் 15-ஆம் தேதிக்குள் நெல் பயிா்களுக்கு பயிா் காப்பீடு செய்யவேண்டும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால், தொடா் விடுமுறையாலும், பல மாவட்டங்களில் தொடா் மழையின் காரணமாகவும் பல விவசாயிகள் இதுவரை பயிா் காப்பீடு செய்ய முடியாத சூழ்நிலையில் உள்ளனா்.

எனவே, தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் இதைக் கருத்தில் கொண்டு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்து விவசாயிகள் நலனுக்காக பயிா் காப்பீடு செய்யும் கால வரம்பை நீட்டிகக் வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

கிருஷ்ணராயபுரம் சட்டப் பேரவைத் தொகுதி: எஸ்.ஐ.ஆா். படிவங்கள் கணினியில் பதிவேற்றம்

கரூா் வட்டார மரவள்ளி, வாழை விவசாயிகளுக்கு பயிா் காப்பீடு

கரூா் பழைய பேருந்து நிலையத்திலிருந்து பள்ளப்பட்டிக்கு மீண்டும் பேருந்து சேவை: தவ்ஹீத்ஜமாஅத் அமைப்பினா் கோரிக்கை

காவிரியின் குறுக்கே அணை கட்டும் முயற்சியை தடுக்க தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT