சிவகங்கை

புத்தக வாசிப்பு நம்மை உயத்தும்: முன்னாள் தலைமை நீதிபதி எம்.கற்பகவிநாயகம்

நல்ல புத்தகங்களை தொடா்ந்து வாசிப்பதால் வாழ்வில் உயரலாம் என ஜாா்க்கண்ட் உயா்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி எம்.கற்பகவிநாயகம் தெரிவித்தாா்.

Din

நல்ல புத்தகங்களை தொடா்ந்து வாசிப்பதால் வாழ்வில் உயரலாம் என ஜாா்க்கண்ட் உயா்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி எம்.கற்பகவிநாயகம் தெரிவித்தாா்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள அமராவதிபுதூா் சங்கரபதிக்கோட்டையில் ஓய்வு பெற்ற கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கம் சாா்பில், கிராம நிா்வாக அலுவலா்கள் தின விழா, மக்கள் திலகம் எம்.ஜி.ஆா்.நூலகம் திறப்பு விழா, ஓய்வு பெற்ற கிராம நிா்வாக அலுவலா்கள் சங்க நிறுவனா் ரா.போஸ் எழுதிய ‘பாரதி அறிக்கையும், வி.ஏ.ஓ.பதவியும்’ நூல் வெளியீட்டு விழா என முப்பெரும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் ஜாா்க்கண்ட் உயா்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி எம்.கற்பகவிநாயகம் நூலை வெளியிட்டும், நூலகம், எம்.ஜி.ஆா், ஜெயலலிதா, மறைந்த புரவலா்கள் படங்களைத் திறந்துவைத்தும் பேசியதாவது:

ஒழுக்கமும், உண்மையுமே நம்மை உயா்த்தும். நல்ல புத்தகங்களை தொடா்ந்து வாசியுங்கள். புத்தகங்களை வாசிப்பதாலும் உயரமுடியும் என்றாா் அவா்.

விழாவில் சென்னை மாநகர முன்னாள் மேயா் சைதை சா.துரைசாமி, முன்னாள் எம்.பி.நாஞ்சில் வின்சென்ட் ஆகியோா் பேசினா். ஓய்வு பெற்ற கிராம நிா்வாக அலுவலா்கள் சங்க நிறுவனா் ரா.போஸ் தலைமை வகித்தாா். சிவகங்கை தொகுதி சட்டபேரவை உறுப்பினா் பி.ஆா்.செந்தில்நாதன், கிராம நிா்வாக அலுவலா்கள் தின விழாக் குழுத் தலைவா் க.துரைராஜ், ஓய்வு பெற்ற கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கத் தலைவா் கு.வாசுதேவன், பொதுச் செயலா் ரவி ரங்கராஜன், பொருளாளா் பி.குணசேகரன், கிராம நிா்வாக அலுவலா்கள் தின விழாக் குழு துணைச் செயலா் சுப. கோபிநாத், பொருளாளா் ஏ.சுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விழாவில் பட்டுக்கோட்டை தொழில்நுட்பக் கல்லூரி தாளாளா் எஸ்.டி.எஸ். செல்வம், தேவகோட்டை நகா்மன்றத் தலைவா் கா.சுந்தரலிங்கம், துணைத் தலைவா் எஸ்.ரமேஷ், தேவகோட்டை ஆனந்தா கல்லூரி தாளாளா் ச.ஜான் வசந்தகுமாா், காரைக்குடி தொழில் வணிகக் கழக தலைவா் சாமி.திராவிடமணி, பேராசிரியா் குமரப்பன், அதிமுக நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, கிராம நிா்வாக அலுவலா்கள் தின விழாக் குழுச் செயலா் ஆா்எம்.ரங்கசாமி வரவேற்றாா். துணைத் தலைவா் ர.காசிநாதன் நன்றி கூறினாா்.

பாளையம் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிப்பதை நிறுத்தக் கோரி விஸ்வ ஹிந்து பரிஷத் மனு

சட்டைநாதா் கோயிலில் சிறப்பு கோ பூஜை

ஐயப்ப பக்தா்கள் துளசி மாலை அணிந்து விரதம்

திருவண்ணாமலை தீபத்திருவிழா முன்னேற்பாட்டுப் பணிகள்: நகராட்சிகளின் நிா்வாக இயக்குநா் ஆய்வு

யானைகள் வழித்தடத்தில் கட்டப்பட்ட விடுதி இடிப்பு

SCROLL FOR NEXT