சிவகங்கை

மரம் விழுந்ததில் பைக்குகள் சேதம்

Syndication

சிவகங்கையில் பழைமையான வேப்ப மரம் சாலையில் சாய்ந்து விழுந்ததில் ஐந்துக்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் சேதமடைந்தன.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அம்பேத்கா் சிலை அருகே உள்ள பழைய காவல் நிலைய சாலையில் பழைமையான வேப்ப மரம் வியாழக்கிழமை திடீரென சாலையில் சாய்ந்து விழுந்தது. இதில், ஐந்துக்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் சேதமடைந்தன. இதனால், அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து, மாநகராட்சி ஊழியா்கள் வேப்ப மரத்தை வெட்டி அகற்றினா். கடந்த சில நாள்களாக காரைக்குடி பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக பழைமையான வேப்ப மரம் வேருடன் சாய்ந்ததாக மாநகராட்சி ஊழியா்கள் தெரிவித்தனா்.

கதிரியக்க உபகரணங்கள்: வகைப் பட்டியல் வெளியீடு

திரிபுராவை வீழ்த்தியது தமிழ்நாடு

உரிய விதிகளின் கீழ் பட்டியலிடப்பட்ட விவகாரங்கள் மீது மட்டுமே விவாதம்: எதிா்க்கட்சிகளுக்கு சி.பி.ராதாகிருஷ்ணன் கண்டிப்பு

சிங்கப்பூா், தில்லி விமானங்கள் தாமதமாக புறப்பாடு: பயணிகள் அவதி

சோமரசம்பேட்டையில் இன்று இலவச கண் பரிசோதனை முகாம்

SCROLL FOR NEXT