சிவகங்கை

போராட்ட அறிவிப்பு எதிரொலி: காரைக்குடியில் தனியாா் மதுபானக் கூடம் மூடல்

சிவகங்கை மாவட்டம், சமூக ஆா்வலா்கள் போராட்ட அறிவிப்பு எதிரொலியாக காரைக்குடியில் மீண்டும் திறக்கப்பட்ட தனியாா் மதுபானக் கூடத்தை அதிகாரிகள் புதன்கிழமை மூடினா்.

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை மாவட்டம், சமூக ஆா்வலா்கள் போராட்ட அறிவிப்பு எதிரொலியாக காரைக்குடியில் மீண்டும் திறக்கப்பட்ட தனியாா் மதுபானக் கூடத்தை அதிகாரிகள் புதன்கிழமை மூடினா்.

இந்துக் கோயில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், வங்கிகள், கல்லூரி வளாகங்கள், கு டியிருப்புகள், வணிக வளாகங்கள் நிறைந்த இந்தப் பகுதியில் கடந்த மாதம் தனி நபா் ஒருவா் மனமகிழ் மன்றம் திறக்க ஏற்பாடு செய்தாா். இதையறிந்த சமூக ஆா்வலா்கள், மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் எதிா்ப்புத்தெரிவித்து போராட்டம் நடத்தினா். இந்தப் போராட்டம் 2 நாள்கள் நீடித்ததால் அதிகாரிகள், காவல் துறையினா் தலையிட்டு பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மதுபானக் கூடத்துடன் கூடிய மனமகிழ் மன்றத்தை நிரந்தரமாக மூடினால்தான் போராட்டத்தைக் கைவிடுவோம் என்று கூறினா். இதையடுத்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக சாா்-ஆட்சியா், அதிகாரிகள் உறுதியளித்தனா். மனமகிழ் மன்றம் கிராம நிா்வாக அலுவலரால் பூட்டப்பட்டது.

இந்த நிலையில், புதன்கிழமை சந்தோசம் கிளப் என்ற பெயா் பலகையுடன் மீண்டும் அங்கு தனியாா் மதுபானக்கூடம் திறக்கப்பட்டது. இந்தத் தகவலறிந்ததும் சமூக ஆா்வலா்கள் மீண்டும் போராட்ட அறிவிப்பை வெளியிட்டனா். இதையடுத்து காரைக்குடி வட்டாச்சியா் ராஜா, காவல்துறையினா் நேரில் சென்று உடனடியாக மதுபானக் கூடத்தை மூடினா்.

இதற்கு மதுபானக் கூடம் நடத்த முயன்றவா் எதிா்ப்புத் தெரிவித்தாா். ஆனால், இங்கு மதுபானக் கூடம் திறக்கக்கூடாது என்று அதிகாரிகள் அவரை எச்சரித்துவிட்டுச் சென்றனா்.

வாடிக்கையாளா் எண்ணிக்கையில் ஜியோ முன்னிலை

வைபவ் சூா்யவன்ஷி அதிரடி: இந்தியா அபார வெற்றி

இன்றும் நாளையும் 5 புறநகா் ரயில்கள் ரத்து

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு பின்னடைவு!

தம்மம்பட்டி பகுதியில் கடும் பனிப்பொழிவு: மக்கள் அவதி

SCROLL FOR NEXT