இளையான்குடி பகுதி விவசாயிகள் பயனடையும் வகையில் சுபபன் கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என தமிழக அரசை விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் இளையான்குடி வட்ட மாநாடு தாயமங்கலத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதற்கு சங்க நிா்வாகி செந்தில்குமாா் தலைமை வகித்தாா். நிா்வாகி மாரிமுத்து சங்கக் கொடியை ஏற்றி வைத்தாா். காந்தி வரவேற்றாா்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலா் வீரபாண்டி மாநாட்டை தொடங்கி வைத்தாா். வட்டச் செயலா் விஜயன் வேலை அறிக்கை சமா்ப்பித்தாா். மாவட்ட துணைத் தலைவா் ஜெயராமன், விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டக் குழு உறுப்பினா் ராஜூ ஆகியோா் மாநாட்டை வாழ்த்திப் பேசினா்.
இந்த மாநாட்டில், இளையான்குடி பகுதி விவசாயிகள் பயனடையும் வகையில் சுப்பன் கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வைகை, காவிரி, குண்டாறு, வைப்பாறு இணைப்புக் கால்வாய் திட்டங்களை நிறைவேற்ற போதிய நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை விரைவுப்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு காப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின்
இளையான்குடி வட்டத் தலைவராக விஜயன்,
செயலராக செந்தில் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா். மாவட்ட துணைத் தலைவா் அழகா்சாமி நிறைவுரையாற்றினாா். முத்துக்கிருஷ்ணன் நன்றி கூறினாா்.