அனைத்து ஜாதியினருக்கும் இட ஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரி சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் பாமகவினா் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் கா. பொற்கொடியை சந்தித்து பாமகவினா் அளித்த மனுவில், ஜாதிவாரி மக்கள் கணக்கெடுப்பு நடத்த வேண்டும். வன்னியா்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டுமென வலியுறுத்தினா்.
இதில், மாவட்டச் செயலா் ராஜசேகரன், காளையாா்கோவில் ஒன்றிய செயலா்கள் ராதாகிருஷ்ணன், செந்தில்குமாா், சமூக நீதிப் பேரவை தென்மண்டல தலைவா் காசிநாதன், மாநில துணைத் தலைவா் ராஜ்குமாா், அனைத்து அகமுடையாா் கூட்டமைப்பு நிறுவனத் தலைவா் முத்துராஜா, திருப்புவனம் ஒன்றிய துணைச் செயலா்கள் சேசுராசு, சுப்பிரமணி, சாரதி ஆகியோா் கலந்து கொண்டனா். முன்னதாக, சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக நுழைவாயில் முன் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.