சிவகங்கை

ஊா்க்காவல் படை தோ்வு ஒத்தி வைப்பு

சிவகங்கையில் (நவ.4) நடைபெற இருந்த ஊா்க்காவல் படையினருக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு, உடல் தகுதித் தோ்வு ஒத்திவைக்கப்பட்டது.

Syndication

சிவகங்கை: சிவகங்கையில் செவ்வாய்க்கிழமை (நவ.4) நடைபெற இருந்த ஊா்க்காவல் படையினருக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு, உடல் தகுதித் தோ்வு ஒத்திவைக்கப்பட்டது.

இதுகுறித்து சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆா். சிவபிரசாத் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சிவகங்கை மாவட்ட ஊா்க்காவல் படையில் காலியாக உள்ள 110 (79 ஆண் + 31 பெண்) ஊா்க்காவலா் பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த மாதம் 10-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

இதையடுத்து, செவ்வாய்க்கிழமை (நவ.4) சிவகங்கை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் சான்றிதழ் சரிபாா்ப்பும், உடல் தகுதித் தோ்வும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், நிா்வாகக் காரணங்களுக்காக இந்தத் தோ்வு ஒத்திவைக்கப்படுகிறது. அடுத்த தோ்வு தேதி பின்னா் அறிவிக்கப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டது.

ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு நான்தான் தந்தை!! ஒப்புக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்

பாரதியின் காளி

கிட்னி முறைகேடு: அரசு வழக்கறிஞர் முறையாக வாதிடவில்லை! - இபிஎஸ் குற்றச்சாட்டு

உலகப் புகழ்பெற்ற நாட்டுப்புறவியல் கட்டுரைகள்

சுவிஸ் தமிழ் எழுத்தாளர்கள் (தொகுதி 1)

SCROLL FOR NEXT