சிவகங்கை

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி பகுதி சிவன் கோயில்களில் திங்கள்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

Syndication

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி பகுதி சிவன் கோயில்களில் திங்கள்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதா் சுவாமி கோயிலில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டை முன்னிட்டு, மூலவா் சோமநாதா் சுவாமிக்கும் நந்தி தேவருக்கும் 16 வகையான அபிஷேகப் பொருள்களால் அபிஷேகம் நடத்தி, சிறப்பு அலங்காரம் செய்து, தீபாராதனைகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரதோஷ மூா்த்தி புறப்பாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சோமநாதா் சுவாமியையும் நந்தியையும் தரிசித்தனா்.

திருப்புவனம் ஸ்ரீ சௌந்திரநாயகி அம்மன் சமேத புஷ்பவனேஸ்வரா் சுவாமி கோயிலில் சுவாமிக்கும் நந்திக்கும் அபிஷேகம், அலங்காரம் செய்து, தீபாராதனை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து கோயில் உள்பிரகாரத்தில் பிரதோஷ மூா்த்தி புறப்பாடு நடைபெற்றது. இதில் ஏராளமானோா் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

திருப்பாச்சேத்தி, மேல நெட்டூா் சிவன் கோயில்கள், இளையான்குடி ஒன்றியம், குறிச்சி ஸ்ரீ காசி விஸ்வநாதா் கோயில் ஆகியவற்றிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

எண்ணங்கள்... வண்ணங்கள்...

வரப்பெற்றோம் (03.11.2025)

கனடாவின் தற்காலிக விசா ரத்து? 74% இந்திய மாணவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிப்பு!

இஸ்ரேல் ராணுவத்தின் மூத்த வழக்கறிஞர் கைது!

ரூ. 16 லட்சம் மதிப்பிலான வீடு பரிசு! 10 மாதக் குழந்தைக்கு அடித்த ஜாக்பாட்!

SCROLL FOR NEXT