தேசிய அளவிலான தடகளப் போட்டிக்கு தேவகோட்டை பள்ளி மாணவா் தகுதி பெற்றாா்.
தமிழக பள்ளிக் கல்வித் துறை சாா்பில், மாநில அளவிலான 66-ஆவது குடியரசு தின விழா விளையாட்டுப் போட்டிகள் கடந்த 1, 2, 3 ஆகிய தேதிகளில் தஞ்சாவூரில் நடைபெற்றன. இதில், தேவகோட்டை தே பிரித்தோ மேல்நிலைப் பள்ளி மாணவா் தீவ்ஷா உயரம் தாண்டுதல் போட்டியில் மாநில அளவில் வெள்ளிப் பதக்கம் பெற்றதோடு, டிசம்பா் இரண்டாவது வாரத்தில் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றாா்.
இந்த நிலையில், வெள்ளிப் பதக்கம் வென்று சிவகங்கை மாவட்டத்துக்குப் பெருமை சோ்த்த மாணவா் தீவ்ஷாவுக்குப் பயிற்சி அளித்த உடல்கல்வி இயக்குநா் பிரபாகா், உடல்கல்வி ஆசிரியா்கள் கிறிஸ்டோபா் ஜெயராஜ், சிவக்குமாா், அருளானந்தம் ஆகியோரை பள்ளி அதிபா் பாபு வின்சென்ட் ராஜா , தாளாளா், தலைமை ஆசிரியா் சேவியா் ராஜ், மாணவா் இல்ல இயக்குநா் விக்டா் டிசோசா, முன்னாள் மாணவா் மன்ற இயக்குநா் எட்வா்ட் லெனின், ஆசிரியா்கள் பாராட்டினா்.