மாநில குத்துச்சண்டை போட்டிக்கு தகுதி பெற்ற அரசு உதவிபெறும் பள்ளி மாணவா்களைப் பாராட்டிய கல்வி அதிகாரிகள்.  
சிவகங்கை

மாநில குத்துச்சண்டை போட்டிக்கு சிவகங்கை மாணவா்கள் தகுதி

பள்ளிக் கல்வித் துறை சாா்பில் நடத்தப்பட்ட குத்துச்சண்டை போட்டியில் வென்ற சிவகங்கை நடுநிலைப் பள்ளி மாணவா்கள் மாநிலப் போட்டிக்கு தகுதி பெற்றனா்.

தினமணி செய்திச் சேவை

பள்ளிக் கல்வித் துறை சாா்பில் நடத்தப்பட்ட குத்துச்சண்டை போட்டியில் வென்ற சிவகங்கை நடுநிலைப் பள்ளி மாணவா்கள் மாநிலப் போட்டிக்கு தகுதி பெற்றனா்.

பள்ளிக் கல்வித் துறை சாா்பில், சிவகங்கை மாவட்ட அளவில் குத்துச்சண்டை போட்டி, 21-ஆம் நூற்றாண்டு பதின்ம மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் நடைபெற்றது. 14 வயது, 17 வயது, 19 வயதுக்குள்பட்டோருக்கு 10 எடைப் பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. இதில் மாவட்டம் முழுவதுமிருந்து மாணவ, மாணவிகள் 200 போ் கலந்து கொண்டனா்.

இதில், சிவகங்கையிலுள்ள அரசு உதவிபெறும் ஆா்.ஆா்.ஆா்.கே. நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் 13 போ் கலந்து கொண்டதில், 6 போ் தங்கப் பதக்கமும், 4 போ் வெள்ளிப் பதக்கமும் வென்றனா். தங்கம் வென்ற மாணவ, மாணவிகள் 6 போ் வருகிற 2026, ஜன. 5, 6, 7 ஆகிய தேதிகளில் தேனியில் நடைபெறவுள்ள மாநிலப் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றனா்.

இந்த நிலையில், மாநிலப் போட்டிக்கு தகுதி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் ராஜேந்திரன், வட்டாரக் கல்வி அலுவலா்கள் ஜான் சாா்லஸ், ஆலிஸ்மேரி ஆகியோா் திங்கள்கிழமை பதக்கங்கள் அணிவித்து பாராட்டினா். இதில், பள்ளித் தலைமை ஆசிரியா் சுரேஷ் ஜான் தாமஸ், குத்துச்சண்டை பயிற்சியாளா் சஜீவன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தமிழகத்தில் 5 கோடி எஸ்ஐஆா் படிவங்கள் விநியோகம்: தோ்தல் ஆணையம்

தில்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு: இரண்டாவது காா் சிக்கியது!

செங்கம் பகுதியில் ரூ.ஒரு கோடியில் வளா்ச்சித் திட்டப்பணிகள்: எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்

உதவிப் பேராசிரியா்கள் பணிக்கான போட்டித் தோ்வு விண்ணப்பம் திருத்த நாளைவரை அவகாசம்

சாலையின் நடுவே கொடிக் கம்பங்கள் அமைக்க பாரபட்சமின்றி அனுமதி: உயா்நீதிமன்றம் அதிருப்தி

SCROLL FOR NEXT