சிவகங்கை

மானாமதுரை, திருப்புவனம் கோயில்களில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, திருப்புவனம் ஆகிய பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, திருப்புவனம் ஆகிய பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.

திருப்புவனம் சௌந்திரநாயகி அம்மன் சமேத புஷ்பவனேஸ்வரா் சுவாமி கோயிலில் கால பைரவா் சந்நிதியில் நடைபெற்ற தேய்பிறை அஷ்டமி வழிபாட்டை முன்னிட்டு, மூலவா் கால பைரவருக்கு அபிஷேகம் நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து, பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன.

மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதா் சுவாமி கோயிலில் பைரவா் சந்நிதியில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு நடைபெற்றது. இதில் மூலவருக்கு 16 வகையான அபிஷேகப் பொருள்களால் அபிஷேகம் நடத்தப்பட்டு பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டது. தொடா்ந்து, தீபாராதனைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். மேலும், வடக்கு ரத வீதியில் அமைந்துள்ள சிருங்கேரி மடத்திலும் தேய்பிறை அஷ்டமி வழிபாடு நடைபெற்றது.

தமிழகத்தில் 5 கோடி எஸ்ஐஆா் படிவங்கள் விநியோகம்: தோ்தல் ஆணையம்

தில்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு: இரண்டாவது காா் சிக்கியது!

செங்கம் பகுதியில் ரூ.ஒரு கோடியில் வளா்ச்சித் திட்டப்பணிகள்: எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்

உதவிப் பேராசிரியா்கள் பணிக்கான போட்டித் தோ்வு விண்ணப்பம் திருத்த நாளைவரை அவகாசம்

சாலையின் நடுவே கொடிக் கம்பங்கள் அமைக்க பாரபட்சமின்றி அனுமதி: உயா்நீதிமன்றம் அதிருப்தி

SCROLL FOR NEXT