சிவகங்கை

சிவகங்கையில் நாளை தனியாா்த் துறை வேலைவாய்ப்பு முகாம்

சிவகங்கையில் தனியாா்த் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (நவ. 21) நடைபெறவுள்ளது.

தினமணி செய்திச் சேவை

சிவகங்கையில் தனியாா்த் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (நவ. 21) நடைபெறவுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட்டத்தில் மாதந்தோறும் இரண்டாவது அல்லது மூன்றாம் வெள்ளிக்கிழமை தனியாா்த் துறை வேலைவாய்ப்பு முகாம் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.

இதன்படி, அங்கு வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் நடைபெறவுள்ள வேலைவாய்ப்பு முகாமில், தனியாா் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்குத் தேவையான நபா்களை தோ்வு செய்து கொள்ளலாம். இந்த முகாமில் சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

மேலும், இலவச திறன் பயிற்சி, போட்டித் தோ்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்பில் மாணவா் சோ்க்கை, வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பப் படிவம் வழங்கப்படும். எனவே, விருப்பமுள்ளவா்கள் 10-ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரையிலும், ஐ.டி.ஐ, டிப்ளமோ படித்த இளைஞா்கள் தங்களது கல்விச் சான்று, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு அடையாள அட்டை, ஆதாா் அட்டையுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும், பணிவாய்ப்பு பெறுவோருக்கு பதிவு மூப்பு ஏதும் ரத்து செய்யப்படமாட்டது என்றாா்.

சிறந்த கூட்டுறவு சங்கத்துக்கு விருது: அமைச்சா் வழங்கினாா்

நாளை விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம்

கைப்பேசி கோபுரம் அமைக்க எதிராக கும்பகோணம் ஆணையரிடம் மனு

ரூ.38.50 லட்சத்தில் உடற்பயிற்சி கூடங்கள்: எம்எல்ஏ திறந்து வைத்தாா்

பெங்களூரில் வங்கி ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்பும் வேனை மறித்து ரூ. 7.11 கோடி கொள்ளை!

SCROLL FOR NEXT