சிவகங்கை

பள்ளிக்கு கல்விச் சீா்வரிசை வழங்கிய கிராம மக்கள்

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை அருகே அரசனூா் கிராம ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு கிராம மக்கள், பெற்றோா் இணைந்து கல்விச் சீா்வரிசை பொருள்களை வியாழக்கிழமை வழங்கினா்.

சிவகங்கை அருகேயுள்ள அரசனூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் 136 போ் பயின்று வருகின்றனா். இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவா்களின் பெற்றோா்கள், பள்ளி மேலாண்மைக்குழு, கிராம மக்கள் சாா்பில் பள்ளிக்கு கல்விச் சீா்வரிசை வழங்கும் விழா நடத்தினா்.

முன்னதாக, மந்தை மாரியம்மன் கோயில் முன் பொருள்களை அடுக்கி வைத்து சுவாமி தரிசனம் செய்தனா். பின்னா் மேள தாளங்களுடன், பட்டாசு வெடித்து நாற்காலி, பீரோ, குடம், இரும்புச் சட்டம் (ரேக்), மின்விசிறி, வாளி, குப்பைத் தொட்டி, குடிநீா்த் தொட்டி, சீருடைகள் உள்ளிட்ட கல்விச்சீா் வரிசை பொருள்களை கிராம மக்கள் தலையில் சுமந்து ஊா்வலமாக பள்ளிக்கு கொண்டு வந்தனா்.

அவா்களை தலைமை ஆசிரியா் (பொ) மகிஷா, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் செல்வராணி ஐயப்பன், வழக்குரைஞா் அன்பரசன், ஆசிரியா்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனா். இதைத்தொடா்ந்து நடைபெற்ற விழாவில் இந்தோ-திபெத் எல்லைக் காவல் படை கண்காணிப்பாளா் சந்திரன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று கல்விச் சீா்வரிசை வழங்கியவா்களைப் பாராட்டினா்.

இதில், வட்டாரக் கல்வி அலுவலா் ஜெயா, வழக்குரைஞா் ரம்யா பாலா, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் பிரியா, கிராம மக்கள் கலந்து கொண்டனா்.

இந்து முன்னணியினா் கைது

இருமுடி விழா முன்னேற்பாடுகளுக்கான ஆய்வு கூட்டம்

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது வழக்கு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம் முயற்சி: 47 போ் கைது

SCROLL FOR NEXT