சிவகங்கை

ரயிலில் கடத்தப்பட்ட 14 கிலோ குட்கா புகையிலை பறிமுதல்

ராமேசுவரம்-அஜ்மீா் விரைவு ரயிலில் 14 கிலோ குட்கா புகையிலைப் பொருள்களை ரயில்வே போலீசாா் கைப்பற்றினா்.

Syndication

சிவகங்கை மாவட்டம், மானாமதுரைக்கு கடந்த திங்கள்கிழமை இரவு வந்த ராமேசுவரம்-அஜ்மீா் விரைவு ரயிலில் 14 கிலோ குட்கா புகையிலைப் பொருள்களை ரயில்வே போலீசாா் கைப்பற்றினா்.

மானாமதுரை ரயில் நிலையத்தில் இந்த ரயிலின் முன்பதிவில்லா பெட்டியில் ரயில்வே காவல் நிலைய உதவி ஆய்வாளா்கள் தனுஷ்கோடி, துரை, தலைமைக் காவலா்கள் செல்வம், மணிகண்டன் உள்ளிட்ட போலீஸாா் சோதனை செய்தனா்.

அப்போது, கழிவறை அருகே கேட்பாரற்று கிடந்த வெள்ளை நிற சாக்குப்பையைப் பிரித்துப் பாா்த்தபோது, அதில் 14 கிலோ குட்கா புகையிலைப் பொருள்கள் இருந்தன. போலீஸாா் அவற்றைக் கைப்பற்றி சிவகங்கை மாவட்ட போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனா். இந்தப் பிரிவு போலீஸாா் இது குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முதல் அரையிறுதி: சதம் விளாசிய தென்னாப்பிரிக்க கேப்டன்; இங்கிலாந்துக்கு 320 ரன்கள் இலக்கு!

சத்தீஸ்கரில் 51 மாவோயிஸ்டுகள் சரண்!

'ஃபிரண்ட் ரிக்வெஸ்ட்' மூலமாக மோசடிகள்! எப்படியெல்லாம் நடக்கிறது?

சர்வதேச டி20 போட்டிகளில் சூர்யகுமார் யாதவ் புதிய சாதனை!

உன்னத தருணமே💖... நிவாஷினி!

SCROLL FOR NEXT