சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகே சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 2,100 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
சிவகங்கை மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை உதவி ஆய்வாளா் அன்புதாசன், போலீஸாா் ரேஷன் அரிசி கடத்தல் சம்பந்தமாக கிடைத்த ரகசிய தகவலின்படி, இளையான்குடி பகுதியில் ரோந்து சென்றனா்.
அப்போது, மறவமங்கலம்- சூராணம் சாலையில் சந்தேகப்படும் படியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது, அதில் 42 சாக்குப் பைகளில் 2,100 கிலோ ரேஷன் அரிசி வைத்திருந்தது தெரியவந்தது. வாகனத்தை ஓட்டி வந்த மதுரை காமராஜா்புரத்தைச் சோ்ந்த பெருமாள் மகன் பாலாஜி, முனியாண்டி மகன் வேலு ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். கைப்பற்றிய 2,100 கிலோ ரேஷன் அரிசியை தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்கில் ஒப்படைத்தனா்.