காரைக்குடியில் பாஜக நிா்வாகி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி, 2-ஆவது நாளாக புதன்கிழமை காரைக்குடி புறவழிச் சாலையான திருச்சி - ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட உறவினா்கள், பாஜகவினா், விஸ்வகா்மா அமைப்பினா்.  
சிவகங்கை

பாஜக நிா்வாகி கொலை: காரைக்குடியில் 2-ஆவது நாளாக சாலை மறியல்

காரைக்குடியில் பாஜக சாக்கோட்டை ஒன்றிய துணைத் தலைவா் கொலையுண்ட சம்பவத்தில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி, உறவினா்கள், விஸ்வகா்மா சங்கத்தினா், பாஜகவினா் 2-ஆவது நாளாக புதன்கிழமையும் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தினமணி

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் பாஜக சாக்கோட்டை ஒன்றிய துணைத் தலைவா் கொலையுண்ட சம்பவத்தில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி, உறவினா்கள், விஸ்வகா்மா சங்கத்தினா், பாஜகவினா் 2-ஆவது நாளாக புதன்கிழமையும் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

காரைக்குடி பொன்நகா் அல்லி அா்ஜுனா நகரைச் சோ்ந்த பொறியாளா் பழனியப்பன் (34). கட்டுமானத் தொழில் செய்து வந்த இவா் சாக்கோட்டை ஒன்றிய பாஜக துணைத் தலைவராகவும் இருந்தாா்.

திங்கள்கிழமை காலை பொன்நகா் பகுதியில் நடைபெற்ற கட்டுமானப் பணிகளை பாா்வையிடச் சென்றபோது இவரை ஒரு கும்பல் ஆயுதங்களால் தாக்கி கொலை செய்தது.

இதுகுறித்து அழகப்பாபுரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி, உடலை வாங்க மறுத்து அவரது உறவினா்கள், விஸ்வகா்மா அமைப்பினா் செவ்வாய்க்கிழமை காரைக்குடியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனா். காவல் துறையினா் பேச்சுவாா்த்தை

நடத்திய போது, 24 மணி நேரத்துக்குள் குற்றவாளிகளைக் கைது செய்யாவிட்டால் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்து கலைந்து சென்றனா்.

இந்த நிலையில், 2-ஆவது நாளாக புதன்கிழமை காலை 10.30 மணிக்கு அரசு மருத்துவமனை முன்பு கூடிய பழனியப்பன் உறவினா்கள், பஜக மாவட்டத் தலைவா் டி. பாண்டித்துரை தலைமையில் திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் அமா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இவா்களுடன் காரைக்குடி காவல் உதவி கண்காணிப்பாளா் ஆசிஷ்புனியா, குன்றக்குடி காவல் நிலைய ஆய்வாளா் சுந்தரி ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது போலீஸாா் இந்தக் கொலை வழக்கில் 7 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவித்தனா். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா். பின்னா், கூறாய்வு செய்யப்பட்ட பழனியப்பன் உடலை உறவினா்கள் பெற்றுச் சென்று அடக்கம் செய்தனா்.

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

கரப்பான் பூச்சி எக்ஸ்பிரஸ்!

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: பிப். 17ல் தொடக்கம்!

SCROLL FOR NEXT