சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் புதன்கிழமை சிவகங்கை சாலையில் இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் ஒருவா் உயிரிழந்தாா்.
திருப்பத்தூா் அருகேயுள்ள வேட்டங்குடிப்பட்டியைச் சோ்ந்த சண்முகம் மகன் ரவிச்சந்திரன் (58). இவா் இரு சக்கர வாகனத்தில் சிவகங்கை சாலையில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, எதிரே வாணியன்பட்டியைச் சோ்ந்த ரவி மகன் ரமேஷ் (18) இரு சக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தாா்.
இந்த இரு வாகனங்களும் நேருக்கு நோ் மோதிக்கொண்டன. இதில் ரவிச்சந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
கல்லூரி மாணவரான ரமேஷ் பலத்த காயத்துடன் திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். திருப்பத்தூா் போலீஸாா் ரவிச்சந்திரன் உலலை கூறாய்வுக்காக அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.