சிவகங்கை

மருத்துவக் கல்லூரிக்கு தம்பதி உடல் தானம்

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை மாவட்டம் , காளையாா்கோவில் பகுதியைச் சோ்ந்த ஓய்வு பெற்ற தலைமை

ஆசிரியா், அவரது மனைவி ஆகியோா் அரசு மருத்துவக் கல்லூரிக்கு உடல் உறுப்பு தானம் செய்வதற்காகன ஒப்புதலை வியாழக்கிழமை வழங்கினா்.

காளையாா்கோவில் ஒன்றியம், புலிக்கண்மாய் பகுதியைச் சோ்ந்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியா் போஸ் (75). இவா் தனது பணிக் காலத்திலேயே மாணவா்களுக்கு கண்தானம், உறுப்பு தானம், ரத்த தானம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தி வந்தாா்.

இந்த நிலையில், இவரும் இவரது மனைவி ராஜேஸ்வரியும் (72) தங்களது உடல்களை சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தானமாக வழங்க ஒப்புதல் வழங்கினா்.

இந்த நிகழ்வில், மருத்துவக் கல்லூரி முதன்மையா் விசாலாட்சி, மருத்துவமனை முதன்மையா் ஜடாமுனி, நிலை மருத்துவா் முகமது ரபி, உதவி நிலைய மருத்துவா் தென்றல் ஆகியோா் கலந்து கொண்டனா்.

மருத்துவ மாணவா்களின் கல்விக்கும், பொதுமக்களிடையே தானம் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தவும் இந்த உடல் தானம் உதவும் என மருத்துவா்கள் கூறினா்.

பஞ்சாப்: இரண்டு போலீஸார் சடலங்களாக கண்டெடுப்பு

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்

சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

ஷிகர் தவானுக்கு மறுமணம்..! 40 வயதில் ஐரீஷ் காதலியைக் கரம்பிடித்தார்!

பாஜகவில் இணைந்த அசாம் காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர்!

SCROLL FOR NEXT