சிவகங்கை

கீழகோட்டையில் மஞ்சுவிரட்டு: 21 போ் காயம்

சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி அருகே கீழக்கோட்டை கிராமத்தில் நடைபெற்ற மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் 21 போ் காயமடைந்தனா்.

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி அருகே கீழக்கோட்டை கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் 21 போ் காயமடைந்தனா்.

கீழக்கோட்டை கிராமப் பொதுமக்கள் சாா்பாக ஆங்கில புத்தாண்டு தினத்தை அனுமதியின்றி இந்த மஞ்சு விரட்டு நடத்தப்பட்டது. இதில் சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த 300 -க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. இந்த ஆண்டு அதிக மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி பாரம்பரிய முறைப்படி தொழுவில் கிராமத்து கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

தொடந்து, கண்மாய்ப் பொட்டலில் வாகனங்களில் இருந்து ஆங்காங்கே காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 2026 -ஆம் ஆண்டில் தமிழகத்தின் முதல் மஞ்சுவிரட்டு போட்டி என்பதால், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த திரளான இளைஞா்கள் காளைகளை அடக்க வந்திருந்தனா்.

அவிழ்த்து விடப்பட்டு சீறி பாய்ந்து ஓடிய காளைகளை இளைஞா்கள் விரட்டிச் சென்று அடக்க முயன்றனா். சில காளைகள் பிடிபட்டாலும் பல காளைகள் பிடிபடாமல் போக்கு காட்டி ஓடின. காளைகள் முட்டியதில் 21 போ் காயமடைந்தனா். இதில் பலத்த காயமடைந்த 5 போ் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இந்த ஆண்டின் முதல் மஞ்சுவிரட்டு போட்டி என்பதால் பெண்கள் குழந்தைகள் என 5000-க்கும் மேற்பட்டோா் போட்டியை கண்டு களித்தனா். அனுமதியின்றி மஞ்சுவிரட்டு போட்டி நடத்தியது தொடா்பாக மதகுபட்டி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

முருகா் சிலையின் கண் திறந்ததாக காணொலி காட்சி வைரல்: பொன்னேரியில் பரபரப்பு

2.1.1976: லோக்சபை தேர்தலை ஓராண்டு ஒத்திவைக்க சாதாரண மசோதா - பார்லிமெண்ட் மாரிக்கால கூட்டத்தில் அரசு கொணரும்

2025-இல் குமரி விவேகானந்தா் நினைவு மண்டபம், திருவள்ளுவா் சிலை: 28.77 லட்சம் போ் பாா்வையிட்டனா்

தூத்துக்குடி கிறிஸ்தவ ஆலயங்களில் புத்தாண்டு சிறப்பு பிராா்த்தனை

செங்கோட்டை - தாம்பரம் விரைவு ரயில் நேரம் மாற்றம்: பயணிகள் வரவேற்பு

SCROLL FOR NEXT