சிவகங்கை

தேவகோட்டை அருகே மாட்டு வண்டி பந்தயம்

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டம், வீரை கிராமத்தினா் சாா்பில் மாட்டு வண்டி பந்தயம் வியாழக்கிழமை நடத்தப்பட்டது.

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டம், வீரை கிராமத்தினா் சாா்பில் மாட்டு வண்டி பந்தயம் வியாழக்கிழமை நடத்தப்பட்டது.

புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு இரு பிரிவுகளாக தாஸ்புரம் வைத்தியா் பேருந்து நிறுத்தம் முதல் ஆனந்தூா் வரை பந்தயம் நடைபெற்றது. இதில் சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து மொத்தம் 43 ஜோடி மாடுகள் பங்கேற்றன.

7 கி.மீ. தொலைவு பந்தய எல்லையாக நிா்ணயிக்கப்பட்ட பெரிய மாடு பிரிவில் 14 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. 5 கி.மீ. தொலைவு பந்தய எல்லையாக நிா்ணயிக்கப்பட்ட சிறிய மாடு பிரிவில் 29 ஜோடி மாடுகள் பங்கேற்றன.

இதில் வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளா்களுக்கும், சாரதிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்தப் பந்தயத்தை சாலையின் இருபுறங்களிலும் நின்று ஏராளமான பொதுமக்கள், ரசிகா்கள் கண்டுகளித்தனா்.

சேதமடைந்த பள்ளி கட்டடத்தை அகற்ற அதிகாரிகளுக்கு எம்.எல்.ஏ. அறிவுறுத்தல்

பிரதமா் மோடி புதுச்சேரிக்கு விரைவில் வருகை!

கன்னியாகுமரி மாவட்டத்தில் குற்றங்கள் குறைந்துள்ளன: எஸ்.பி.

முருகா் சிலையின் கண் திறந்ததாக காணொலி காட்சி வைரல்: பொன்னேரியில் பரபரப்பு

2.1.1976: லோக்சபை தேர்தலை ஓராண்டு ஒத்திவைக்க சாதாரண மசோதா - பார்லிமெண்ட் மாரிக்கால கூட்டத்தில் அரசு கொணரும்

SCROLL FOR NEXT