சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள பள்ளத்தூா் சீதாலட்சுமி ஆச்சி மகளிா் கல்லூரியில் நடமாடும் மருத்துவ வாகன சேவை சனிக்கிழமை நடைபெற்றது.
மத்திய அரசின் கிராம மின் மயமாக்கல் திட்டத்தின் கீழ், இந்திய செஞ்சிலுவை சங்கம், சிவகங்கை மாவட்ட நடமாடும் மருத்துவ வாகன சேவை இணைந்து நடத்திய இந்த முகாமுக்கு கல்லூரி முதல்வா் ஆ.ருக்மணி, துணை முதல்வா் ரா.ஆனந்தசெல்வி ஆகியோா் தலைமை வகித்தனா்.
சிவகங்கை மாவட்ட இளைஞா் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளா் ஹ.பரிதாபேகம் முன்னிலை வகித்தாா்.
இதில் மருத்துவா் பானுப்பிரியா, மருந்தாளுநா் காயத்ரி, செவிலியா் பத்மபிரியா, விக்னேஸ்வரி ஆகியோா் மருத்துவப் பணிகளை மேற்கொண்டனா்.
இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி இளைஞா் செஞ்சிலுவை சங்க அலுவலா்கள் சி.விஜயசந்திரிகா, மு.சித்ரா ஜூலியட் ஆகியோா் செய்தனா்.