சிவகங்கை மாவட்டம், கானாடுகாத்தான் பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஜன.6) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து காரைக்குடி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் எம்.லதாதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு : கானாடுகாத்தான் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், ஸ்ரீராம்நகா், கோட்டையூா், வேலங்குடி, பள்ளத்தூா், செட்டிநாடு, கானாடுகாத்தான், கொத்தமங்கலம், நெற்புகபட்டி, ஆவுடைபொய்கை, ஓ.சிறுவயல், ஆத்தங்குடி, பலவான்குடி ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.