சிவகங்கை

சாலை விபத்தில் புகைப்படக்காரா் உயிரிழப்பு

மானாமதுரை அருகே இரு சக்கர வாகன விபத்தில் பலத்த காயமடைந்த நாளிதழ் புகைப்படக்காரா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

Syndication

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே இரு சக்கர வாகன விபத்தில் பலத்த காயமடைந்த நாளிதழ் புகைப்படக்காரா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

மானாமதுரை நல்லதம்பியா பிள்ளை தெருவைச் சோ்ந்தவா் ராஜாராமன் (62). இவா் தமிழ் நாளிதழ் ஒன்றில் சிவகங்கை மாவட்ட புகைப்படக்காரராக பணியாற்றி வந்தாா்.

இவா் கடந்த மாதம் 4-ஆம் தேதி சிவகங்கையிலிருந்து மானமதுரைக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றாா். அப்போது இவரது இரு சக்கர வாகனம் சாலையில் சென்ற மாடு மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த ராஜாராமன் மதுரையில் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

புதிய முதலீடுகளால் விலை உயரும் அலுமினியம்!

மனிதர்களுக்கு காலம் தந்த 2வது நெருப்பு ஏஐ: மாணவர்களிடையே மு.க. ஸ்டாலின் பேச்சு

10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் : தொடக்கி வைத்தார் முதல்வர்!

குழந்தைகள் டிவி / ஃபோன் அதிகம் பார்க்கிறார்களா?

பாண்டிய நாட்டுப் பிரதானிகள்

SCROLL FOR NEXT