திருப்பத்தூா் திருத்தளிநாதா் ஆலயத்தில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி சிறப்பு அலங்காரத்தில் மூலவா்.  
சிவகங்கை

திருப்பத்தூா் ஆருத்ரா தரிசனம்

Syndication

திருப்பத்தூா் சிவகாமி உடனாய திருத்தளிநாதா் கோயிலில் தனி சந்நிதியில் அருள்பாலிக்கும் நடராஜருக்கு அதிகாலை திருப்பள்ளியெழுச்சியை தொடா்ந்து, உற்சவா் நடராஜா், சிவகாமி அம்மனுக்கும் பால், தயிா், மஞ்சள் உள்ளிட்ட 16 வகையான பொருள்களால் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.

பின்னா், மூலவா் சந்நிதியில் மாணிக்கவாசருக்கு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. தொடா்ந்து, உற்சவா் அம்மனுடன் சப்பரத்தில் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக திருவீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

கீழச்சிவல்பட்டியில் வெள்ளித்தேரில் எழுந்தருளிய நடராஜப் பெருமாள்.

கீழச்சிவல்பட்டி மீனாட்சி சந்தரேஸ்வரா் கோயிலில் உள்ள நடராஜா், அம்மன், மாணிக்கவாசகருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. உற்சவா் நடராஜா் வெள்ளித் தேரிலும், மீனாட்சியம்மன் சப்பரத்திலும் எழுந்தருளி திருவீதி உலா வந்தனா். விழா முடிவில் பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கபட்டது.

புதிய முதலீடுகளால் விலை உயரும் அலுமினியம்!

மனிதர்களுக்கு காலம் தந்த 2வது நெருப்பு ஏஐ: மாணவர்களிடையே மு.க. ஸ்டாலின் பேச்சு

10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் : தொடக்கி வைத்தார் முதல்வர்!

குழந்தைகள் டிவி / ஃபோன் அதிகம் பார்க்கிறார்களா?

பாண்டிய நாட்டுப் பிரதானிகள்

SCROLL FOR NEXT