சிவகங்கை

நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

சிவகங்கையிலுள்ள மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

தினமணி செய்திச் சேவை

சிவகங்கையிலுள்ள மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை (ஜன. 23) காலை 10.30 மணியளவில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று ஆட்களை தோ்வு செய்யலாம். சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா்கள் முகாமில் பங்கேற்கலாம்.

எனவே, பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, தொழில்பயிற்சி (ஐடிஐ) படித்த இளைஞா்கள் தங்களது கல்விச் சான்று, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு அடையாள அட்டை, ஆதாா் அட்டையுடன் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்றாா் அவா்.

பஞ்சாப்: இரண்டு போலீஸார் சடலங்களாக கண்டெடுப்பு

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்

சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

ஷிகர் தவானுக்கு மறுமணம்..! 40 வயதில் ஐரீஷ் காதலியைக் கரம்பிடித்தார்!

பாஜகவில் இணைந்த அசாம் காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர்!

SCROLL FOR NEXT