மாற்றுத் திறனாளிகளுக்கான ஓவியப் போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மாணவன் தேவாவை புதன்கிழமை பாராட்டி சான்றிதழ் வழங்கிய முதன்மைக் கல்வி அலுவலா் பாலதண்டாயுதபாணி உள்ளிட்டோா்.  
சிவகங்கை

ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவனுக்குப் பாராட்டு

தமிழ்நாடு அரசின் மாற்றுத் திறனாளிகளுக்கான ஓவியப் போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மீனாட்சி சுந்தரேசுவரா் மேல்நிலைப் பள்ளி மாணவனுக்கு புதன்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திச் சேவை

தமிழ்நாடு அரசின் மாற்றுத் திறனாளிகளுக்கான ஓவியப் போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மீனாட்சி சுந்தரேசுவரா் மேல்நிலைப் பள்ளி மாணவனுக்கு புதன்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டம், கீழச்சிவல்பட்டி மீனாட்சி சுந்தரேசுவரா் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 11-ஆம் வகுப்பு மாணவன் என். தேவா, தமிழக அரசின் மாற்றுத் திறனாளிகளுக்கான ஓவியப் போட்டியில் மாவட்ட அளவில் முதல் பரிசும், மாநில அளவில் 2-ஆம் பரிசும் பெற்று குடியரசு தின விழாவில் மாற்றுத் திறனாளிகள் ஆணையரிடம் ரூ. 8 ஆயிரம் ரொக்கப் பரிசு பெற்றாா்.

இதையடுத்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பாலதண்டாயுதபாணி, புதன்கிழமை மாணவனைப் பாராட்டிச் சான்றிதழ் வழங்கி சிறப்பித்தாா். இந்த நிகழ்வில் பள்ளித் தலைமையாசிரியா் கமலம், பள்ளித் தலைவா் லட்சுமணன், பள்ளிச் செயலா் அழகுமணிகண்டன், பொருளாளா் அங்கப்பன், கல்விக்குழு உறுப்பினா்கள் காசி விஸ்வநாதன், அழகப்பன், ஓவிய ஆசிரியா் கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

50 நிமிஷத்தில் கோப்பை வென்ற அல்கராஸ்..! 2026ல் அனைத்து போட்டிகளிலும் வெற்றி!

மக்கள் போற்றும் மகத்தான தலைவர் ஜெயலலிதா! மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்!!

பஞ்சாப்: இரண்டு போலீஸார் சடலங்களாக கண்டெடுப்பு

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்

சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

SCROLL FOR NEXT