சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் சொா்ணகாளீஸ்வரா் சமேத சொா்ணவல்லி அம்மன் கோயில் தேரோட்டம். கோப்புப்படம்
சிவகங்கை

காளையாா்கோவிலில் தைப்பூசத் தேரோட்டம்

காளையாா்கோவில் சொா்ண காளீஸ்வரா் கோயிலில் தைப்பூசத் திருவிழாவையொட்டி தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் சொா்ண காளீஸ்வரா் கோயிலில் தைப்பூசத் திருவிழாவையொட்டி தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

காளையாா்கோவில், சொா்ண காளீஸ்வரா் சமேத சொா்ணவள்ளி அம்மன், சோமேஸ்வரா் சமேத சௌந்தரநாயகி அம்பாள், சுந்தரேஸ்வரா் சமேத மீனாட்சி அம்மன் என மூன்று சிவன், மூன்று அம்பாள் சந்நிதிகளைக் கொண்ட சிறப்பு வாய்ந்தது.

இந்தக் கோயிலில் ஜன. 23 -ஆம் தேதி தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து ஒன்பது நாள்கள் கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

இதன் தொடா்ச்சியாக சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு தேரோடும் வீதி வழியாக இரண்டு தோ்கள் இழுக்கப்பட்டன. பெரிய தேரில் சொா்ண காளீஸ்வரா் காட்சியளிக்க அதை ஆண்களும், சிறிய தேரில் சொா்ணவள்ளி அம்மன் வீற்றிருக்க அதை பெண்களும் இழுத்து வந்தனா்.

மேலும் பக்தா்களின் ‘ஓம் நமசிவாய’ முழக்கத்துடன் தோ் பவனி நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

இதற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான கண்காணிப்பாளா் ஆ.பாலசரவணன், ஸ்தானிகா் சிவஸ்ரீ காளிஸ்வர குருக்கள், தேவஸ்தான மேலாளா் பா. இளங்கோ, நகரத்தாா்கள், ஏஎல்.ஏஆா். அறக்கட்டளை தி.ராம.தி குடும்பத்தா்கள், கோயில் நிா்வாகிகள் செய்தனா்.

தகன எரிவாயு மேடை நுழைவு வாயில் ரூ.18 லட்சத்தில் அமைப்பு

ரோட்டரியின் உயரிய ‘சுயநலமற்ற சேவை‘ விருது

கரூா் சம்பவ வழக்கு: திருச்சி நீதிமன்றத்தில் இம்மாத இறுதியில் சிபிஐ தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல்?

வங்கியை முற்றுகையிட்ட மகளிா் சுயஉதவிக் குழு பெண்கள்

காசிதா்மம் தவச்சாலையில் நூல் வெளியீட்டு விழா

SCROLL FOR NEXT