முகப்பு
தேனி

பெரியகுளத்தில் பாஜக சார்பில் கருப்புப் பணம் ஒழிப்பு தினம்

பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்ததை அடுத்து பெரியகுளத்தில் பாஜகவினர் கருப்பு பணம் ஒழிப்பு தினமாக கொண்டாடினர்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:04 PM
பகிர்:

பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்ததை அடுத்து பெரியகுளத்தில் பாஜகவினர் கருப்பு பணம் ஒழிப்பு தினமாக கொண்டாடினர்.
 நிகழ்ச்சிக்கு பாஜகவின் பெரியகுளம் நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் பி.ராஜபாண்டியன் தலைமை வகித்தார். சட்டப் பேரவை தொகுதி பொறுப்பாளர் செல்லம் முன்னிலை வகித்தார். இதைத் தொடர்ந்து பெரியகுளம் மூன்றாந்தலில் பட்டாசு வெடித்து,  இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பாஜக பயிற்சி முகாம் பொறுப்பாளர் ப.ஸ்ரீனிவாசன்,  மாவட்ட விவசாய அணி பொதுச் செயலர் பி.தங்கவேல் உள்ளிட்ட கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →