தேனி

பெரியகுளத்தில் ஸ்ரீராதா திருக்கல்யாணம்

DIN

பெரியகுளம் நாமத்துவார் பிரார்த்தனை மையத்தில், ஸ்ரீ ராதா திருக்கல்யாணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
   பெரியகுளம் தெற்கு அக்ரஹாரத்தில் உள்ள நமத்துவார் பிரார்த்தனை மையத்தின் புதிய கட்டடத்தை  நவம்பர் 8 ஆம் தேதி ஸ்ரீஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் திறந்து வைத்தார். அதன்பின்னர், கம்பம் சாலையில் உள்ள தி.ராமானுஜம் அரங்கத்தில் தினமும் மாலை 6 மணிக்கு பிருந்தாவனமும், நந்தகுமாரனும் என்ற தலைப்பில் ஆன்மிகச் சொற்பொழிவு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு நாமத்துவார் பிரார்த்தனை மையத்தில் திருப்பள்ளி எழுச்சி நடைபெற்றது. தொடர்ந்து, நண்பகல் 12 மணிக்கு ஸ்ரீ ராதா திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. திருக்கல்யாணத்தை ஸ்ரீஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் நடத்தி வைத்தார். அதன்பின்னர், மாலையில் ஆன்மிகச் சொற்பொழிவுகள் நடைபெற்றன.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, பெரியகுளம் நாமத்துவார் பிரார்த்தனை மைய பக்தர்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

SCROLL FOR NEXT